Publish Date: Sun, 22 Jun 2008 (17:30 IST)
Updated Date: Sun, 22 Jun 2008 (17:30 IST)
பிலிப்பைன்சைத் தாக்கிய ஃபெங்சென் புயலிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 740 பயணிகளுடன் புயலில் சிக்கிய படகு பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. அதிலிருந்த பயணிகளில் 4 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகி சென். ரிச்சர்ட் கார்டன் கூறுகையில், களத்தில் இருக்கும் ரெட் கிராஸ் ஊழியர்கள் தெரிவித்த தகவல்களின்படி பலியானோர் எண்ணிக்கை 155 என்றார்.
தொலைந்து போன படகையும், அதிலிருந்த பயணிகளையும் மீட்பதற்கு உதவ வேண்டும் என்று அமெரிக்காவிற்குத் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.