Publish Date: Wed, 18 Jun 2008 (19:02 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
இலங்கை மன்னார் அருகில் உள்ள சிறிலங்கப் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், காவலர்கள் இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.
மன்னார் பொது விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள படையினரின் காவலரண் மீது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
"இத்தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து மன்னார் நகரம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு தப்பியோடிய விடுதலைப் புலிகளை தேடும் பணி நடக்கிறது" என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.