Publish Date: Mon, 16 Jun 2008 (16:09 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
இலங்கை வவுனியாவில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையினர் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள அத்தியஸ்தர் காவல் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு வாகனம் ஒன்றில் புறப்பட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 3 பெண் காவலர்கள் உட்பட 12 காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 19 காவலர்கள், 4 பொதுமக்கள் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என சிறிலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.