Publish Date: Sun, 15 Jun 2008 (14:27 IST)
Updated Date: Sun, 15 Jun 2008 (14:26 IST)
தைவான் நாட்டில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தைவான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை தெற்கு தைவானில் உள்ள சியாசீன் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் தெற்கு தைவானில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நில நடுக்கம் காரணமாக உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற தைவான் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.