ஜப்பானில் இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
வடகிழக்கு ஜப்பானில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்தடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட இந்நிலநடுத்தினால் உருவான நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியானதுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலைச்சரிவில் உள்ள சாலைகளும், கட்டடங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. 17 பயணிகளுடன் கூடிய பேருந்து ஒன்றும் நிலச்சரிவில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து 150 க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பின் அதிர்வுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.