வடக்கு சீனாவில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியானதுடன், 7 பேர் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் உள்ளனர்.
வடக்கு சீனாவில் உள்ள ஆன்க்சின் நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த 58 தொழிலாளர்களில் 15 பேர் தாமாகத் தப்பித்தனர். 9 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். மீதமுள்ள 34 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கியவர்களில் 27 பேர் பலியானது இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்க வெடி விபத்துகளில் அதிகமானோர் பலியாகும் நாடுகளின் ஒன்றாகச் சீனா இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுரங்கம் சார்ந்த வெடி விபத்துகளில் 3,800 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.