மன்னாரில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்மோதலில் 6 படையினர் கொல்லப்பட்டதுடன், 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மன்னாரின் பாலம்பிட்டி பிரதான சாலை வழியாக நேற்று வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் முன்நகர்ந்த சிறிலங்கப் படையினரின் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையில் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த கடும் மோதலில் படையினர் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதேபோல மன்னார் பெரியமடுவில் இருந்து சிறாட்டிக்குளம் நோக்கி நேற்று மாலை 3 மணியளவில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்ததாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.