இலங்கையில் அதிகரித்துவரும் ஆட்கடத்தலைத் தடுக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 22 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இத்தகைய கடத்தல்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் 18 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களும் நிவாரணப் பணியாளர்களும் இதில் அடங்குவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கடத்தல்களைத் தடுக்க சிறிலங்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கடத்தப்படுபவர்கள் பற்றிய புகார்கள் மிகக்குறைந்த அளிவிலேயே வந்துள்ளதாக சிறிலங்கக் காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.