ஈரானில் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களைச் செய்த 8 பேர் தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு நாளிதழ் தெரிவித்துள்ளது.
5 பேர் கொலை குற்றத்திற்காகவும், 3 பேர் சிறுமியைக் கற்பழித்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 6 பேர் 34 வயதிற்கும் குறைவானவர்கள். இவர்கள் அனைவரும் ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு வடக்கில் உள்ள இவின் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
ஈரானில் கொலை, கற்பழிப்பு, ஆயுதங்களை வழிப்பறி செய்தல், மனிதர்களையும், போதைப் பொருட்களையும் கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் அங்கு 63 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.