ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
பாரிசில் நடந்த ஆஃப்கானிஸ்தானிற்கு ஆதரவான சர்வதேச மாநாட்டின்போது ஈரான் அயலுறவு அமைச்சர் மனெளச்சர் மொட்டாகியைச் சந்தித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
எரிவாயுக் குழாய்த் திட்டம் நிறைவேறினால் பாகிஸ்தான்- ஈரான் இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படும் என்றும் குரேஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், குரேஷியின் விருப்பத்தை மொட்டாகியும் ஆமோதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.