எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகளில் தன்னிகரற்று சேவை புரிந்ததற்காக ரெட் ரிப்பன் விருதிற்கு உலகளவில் ஐ.நா. தேர்வு செய்துள்ள 25 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
எங்களைப் போன்றவர்கள் (பிளஸ்), சங்கமித்ரா, சங்கல்ப் மறுவாழ்வு அறக்கட்டளை ஆகியவையே அவை ஆகும்.
ஆசியா- பசுபிக் மண்டலத்தில் மொத்தம் 7 தொண்டு நிறுவனங்கள் ஐ.நா. வின் ரெட் ரிப்பன் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எச்.ஐ.வி./எய்ட்ஸ் உடன் வாழும் மகளிருக்கான நேபாள தேசியக் கழகம், எம்பவர் பவுண்டேசன், தாய்லாந்து பெண்கள் சமூக இயக்கம், இந்தோனேசிய யாவ்சன் கேசெஹாட்டன் பாலி ஆகியவை மற்ற 4 நிறுவனங்கள் ஆகும்.
இவர்களுக்கு 5,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த விருது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.