Publish Date: Wed, 11 Jun 2008 (14:02 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
ஆஃப்கானிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்து உள்ளனர்.
பாகிஸ்தான்- ஆஃப்கன் எல்லையில் உள்ள மொகமண்ட் பழங்குடியினர் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கும் ஆஃப்கன் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஆஃப்கன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜியோ தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
"ஆஃப்கன் படையினரின் தாக்குதலுக்குப் பிறகு 13 படையினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 40க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்" என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி அத்தொலைக்காட்சி மேலும் கூறுகிறது.