Newsworld News International 0806 10 1080610032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!

Advertiesment
ஈரான் இஸ்ரேல் முஸ்தஃபா மொஹமத் நஜ்ஜார்
, செவ்வாய், 10 ஜூன் 2008 (14:52 IST)
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பதிலடி மிக மோசமானதாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தஃபா மொஹமத் நஜ்ஜார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று இஸ்ரேல் பத்திரிக்கை ஒன்றில் அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷால் மொஃபாஸ், ஐ.நா. பொருளாதாரத் தடைகள் ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவில்லையெனில் ராணுவ நடவடிக்கை தவிர்க்கமுடியாதது என்று கூறினார்.

அவரது இந்த அதிரடி கூற்றுக் குறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் நஜ்ஜார் ப‌த்‌திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது, "எங்கள் ராணுவ தயார் நிலையில் உள்ளது. தாக்குதல் தொடுப்பது போன்ற முட்டாள் தனமான காரியத்தை எவரேனும் மேற்கொண்டால் பதிலடி விளைவுகள் படுமோசமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் மொஃபாஸ் கூறியதற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil