பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக காமன்வெல்த் நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஒட்டாவாவில் நடந்த 20ஆவது காமன்வெல்த் நாடாமன்றக் கூட்டத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே.ராணி, பயங்கரவாதத்தின் மீது சகிப்புத்தன்மை கூடாது என்ற கொள்கையை சர்வதேசச் சமூகம் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையும் ஒட்டுமொத்த சர்வதேசச் சமூகத்திற்கான அச்சுறுத்தலாகும், அது நம் அனைவராலும் ஒன்றுபட்டுக் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
காமன்வெல்த் அமைப்பின் பொது அவைத் தலைவர் பீட்டர் மில்லிகென், செனட் அவைத் தலைவர் நியோல் ஏ கின்செல்லா, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு தொடர்ந்து ஒருவாரம் நடக்கிறது.