பிரிட்டனில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக பணிபுரிந்த 16 இந்தியர்களை பிரிட்டன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தென் மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஈவ்ஷாம் பண்ணையில் இவர்கள் பணியாற்றி வந்தது தெரிய வந்தவுடன், அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இவர்களிடம் பிரிட்டனில் பணியாற்றுவதற்கான எந்த ஒரு சட்ட பூர்வ ஆவணமும் இல்லை என்று தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள். மேலும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
இவர்களை தற்போது நாட்டை விட்டு வெளியேற்ற தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரிட்டன் குடிப்பெயர்வு உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.