இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பொறுமையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பீஜிங் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், உறுதியான முன்னேற்றம் காணும் வகையிரான பேச்சின் மூலம் மட்டுமே இந்திய- சீன எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.
இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் தற்போது நிலவும் அமைதியான சூழலைக் காப்பதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், எல்லைப் பிரச்சனைக்கு சுமூகமாகத் தீர்வுகாணும் வகையில், அரசியல் வரையறைகள் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளை உருவாக்குவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டு உள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.