Publish Date: Fri, 06 Jun 2008 (14:10 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:44 IST)
இலங்கை தலை நகர் கொழும்புவில் மொரட்டுவா பல்கலைக் கழகம் அருகே குண்டு வெடித்ததில் 21 பேர் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவா பகுதியில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதில் அவ்வழியே சென்று கொண்டிருந்த பேருந்து சிக்கியது. இதில் 21 பேர் பலியானதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
மேலும் குறைந்தது 47 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்த விடுதலப்புலிகள் இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.