Newsworld News International 0806 04 1080604005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஒபாமா!

Advertiesment
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஒபாமா!
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் வேட்பாளருக்கான கட்சித் தேர்தல்களில் ஒபாமாவிற்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் கடும் போட்டி நிலவியது. அதிபர் வேட்பாளர் தேர்வை முடிவு செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த மோன்டானாவில் ஒபாமா வெற்றி பெற்றார்.

ஜன நாயகக் கட்சியிலிருந்து அதிபர் வே‌ட்பாளராக நிறுத்தப்படும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் பிரச்சாரம் அமெரிக்க மக்களைக் கவர்ந்துள்ளதால் அதிபர் வேட்பாளராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அமெரிக்க பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

போட்டி வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் தனது வாழ்த்துக்களை ஒபாமாவிற்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil