சிறிலங்காவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பலியாகியுள்ளதுடன், 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலும், மலைப் பகுதியில் நுவரெலியா, கேகாலை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும் கடும் மழையினால் வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மழையினாலும் மண்சரிவினாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் பள்ளிகளிலும், மடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.