பாகிஸ்தானை விட்டு அதிபர் முஷாரஃப் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் ஆளும் கூட்டணியில் உள்ள அவாமி தேசியக் கட்சியின் தலைமைச் செயலர் மொஹமத் ஹஷாம் பாபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"முஷாரஃப் வெளியேற வேண்டும், எங்களுக்கு அவர் தேவையில்லை, ஒன்று அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் வழக்குகளை சந்திக்க வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
முஷாரஃப்பின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நீதித் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் சீரழிந்து விட்டன என்று கூறிய பாபர் பாகிஸ்தானுக்கு முஷாரஃப்பும் தேவையில்லை, அவரது சர்வாதிகாரமும் தேவையில்லை என்றார்.
தலைநகர் டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பாபார் அங்கு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.