இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 5பேர் கொல்லப்பட்டதுடன், பங்குத்தந்தை உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
யாழ்ப்பாணம் அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்கப் படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
சிறிலங்கப் படையினர் வீசிய எறிகணைகள் கொழும்புத்துறை, குருநகர், பாசையூர் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகளின் மீது விழுந்து வெடித்துள்ளன.
இத்தாக்குதலில் கொழும்புத்துறையில் 3 பேர், குருநகரில் 2 பேர் என மொத்தம் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் யேசுநேசன் என்ற கொழும்புத்துறை பங்குத்தந்தையும், அவரின் எதவியாளர் அபுல உத்தமம் என்பவரும் உள்ளனர்.
இத்தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.