Publish Date: Wed, 28 May 2008 (16:54 IST)
Updated Date: Wed, 28 May 2008 (16:54 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆஃப்கன் எல்லையில் நடந்த குண்டுவெடிப்பில் தாலிபான்கள் 6பேர் கொல்லப்பட்டனர்.
பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் பஜார் பகுதியில் தாலிபான்கள் பயணித்த வாகனத்தில் குண்டுவெடித்துள்ளது. இதில் 6 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவிக்கிறது.
இச்சம்பவம் குறித்து அரசு தரப்பில் தகவல் எதுவும் இல்லை.
பஜார் பகுதியில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகமாகும். ஆஃப்கனில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் அல் காய்டா பயங்கரவாதிகளையும், தாலிபான் தலைவர்களையும் குறிவைத்து இங்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 14 ஆம் தேதி பஜாரில் டமாதோலா என்ற இடத்தில் உள்ள தாலிபான் தலைவரின் வீட்டின் மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.