சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிறுத்தப்பட்ட ஒலிம்பிக் சுடர் ஓட்டம் இன்று மீண்டும் துவங்கியது.
சீனாவின் சியாச்சின் மாகாணத்தில் கடந்த வாரம் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 41,000 த்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்ட பிறகு இன்று நிங்போ நகரில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் துவங்கியது.