சீனாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்துள்ள மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு அரசிற்கு எதிரான போராட்டத்தைத் தள்ளிவைப்பதாக திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
சீனாவிற்கு எதிரான போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, நிலநடுக்கத்தினால் உயிரிழந்துள்ள மக்களுக்கு இரங்கல் தெரிவிக்குமாறு உலகம் முழுவதும் வாழம் திபெத்தியர்களுக்குத் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெர்மனிக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தலாய் லாமா, "சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பரிதவிப்பவர்களின் சோகத்தை நாம் பகிர்ந்து கொள்வோம்'' என்று கூறியுள்ளார்.