Publish Date: Mon, 19 May 2008 (20:28 IST)
Updated Date: Mon, 19 May 2008 (20:28 IST)
பிலிப்பைன்சில் மனநிலை பாதித்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியானதுடன் 6 பேர் படுகாயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகில் அமைந்துள்ள அர்னாலா கிராமத்தில் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை, அப்பகுதிக்கு இயந்திரத் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், அங்கிருந்த வீடுகளை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
வீடுகளில் எடை குறைந்த தகரத்தால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு இருந்ததால், துப்பாக்கி குண்டுகள் வீடுகளை துளைத்துக் கொண்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்தன.
இச்சம்பவத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"இது மனநிலை பாதித்த மனிதரின் வெறிச் செயல், அவரை நாங்கள் தேடி வருகிறோம்" என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.