சீனாவில் ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கி மீட்புப் பணியாளர்கள் 200 பேர் உயிரழந்தனர்.
சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியொன்றில் இன்று மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் திடீர் என்று மணல் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மீட்புப் பணியாளர்கள் 200 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களும், கருவிகளும் கூட மண்ணில் புதைந்து விட்டன.
கடந்த வார நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், இந்த விபத்து மற்றொரு சோகத்தை உருவாக்கியுள்ளது.