Publish Date: Tue, 13 May 2008 (12:05 IST)
Updated Date: Tue, 13 May 2008 (12:04 IST)
வங்கதேச வடக்குப் பகுதியில் உள்ள கோரௌத்ரா நதியில் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் படகு நீரில் மூழ்கியது. இதில் குறைந்தது 36 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
திங்கள் இரவில் நடந்த இந்த படகு விபத்தில் மேலும் 50 பேரைக் காணவில்லை என்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று உள்ளூர் அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்ட இந்த படகில் சுமார் 150 பேர் பயணம் செய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.