தென்மேற்கு சீனாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பீஜிங், வர்த்தக நகரம் ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
லியாங்பிங் பகுதியில் தொடக்கப்பள்ளிக் கட்டம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
சிச்சுவான் மகாணத்தில் குடிநீர்த் தொட்டி இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். யுன்னான் மாகாணத்திலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ஹூ ஜிந்தாவோ உத்தரவிட்டுள்ளார். சிச்சுவான் மகாணத்திற்கு பிரதமர் வென் ஜியாபாவோ விரைந்துள்ளார்.