இலங்கை அம்பாறையில் உணவு விடுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறை நகரத்தின் முக்கியப் பகுதியில் உள்ள உணவு விடுதியில் இன்று மாலை 6.00 மணியளவில் குண்டுவெடித்ததாகவும், இதில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
கிழக்கு மாகாணத் தேர்தல் துவங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.