Publish Date: Thu, 08 May 2008 (18:58 IST)
Updated Date: Thu, 08 May 2008 (18:57 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த 4 மாதங்களில் நடந்த மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,965 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.
இருந்தாலும் சிறிலங்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள பெருமளவிலான இழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
குறிப்பாக, வடக்கு போர் முனையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்றாலும் 121 படையினர் மட்டுமே உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று அச்செய்தி கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட மோதலைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள மயானங்களுக்கு 176 படையினரின் உடல்கள் கொண்டுவரப்பட்டன என்பது நினைவுகூறத்தக்கது.