Publish Date: Wed, 07 May 2008 (17:00 IST)
Updated Date: Wed, 07 May 2008 (16:59 IST)
அல் காய்டாவின் கீழ் இயங்கும் பழங்குடியினத் தலைவர் பைதுல்லா மெசூத் குழுவைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக கராச்சியில் ஊடுருவியிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
வசிரிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் பைதுல்லா மெசூத் அல் கய்டா மற்றும் தலிபான் இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றுவதுடன், அவர்களுக்கு உதவிகளையும் வழங்கி வருபவர். பழங்குடியின தன்னாட்சியையும், மாகாணத்தையும் எதிர்ப்பதுதான் இவரது முக்கியக் குறிக்கோள்.
இந்நிலையில், பைதுல்லா மெசூத் குழுவினைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கராச்சி நகருக்குள் நுழைந்துள்ளதாகவும், அரசுச் சொத்துக்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.