Publish Date: Mon, 05 May 2008 (12:49 IST)
Updated Date: Mon, 05 May 2008 (12:48 IST)
மன்னாரில் சிறிலங்கக் கடற்படையினரின் காவல் நிலை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டனர்.
"மன்னார், பள்ளிக்குடா கோந்தைப்பிட்டியில் உள்ள கடற்படையினரின் காவல் நிலை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தப்பியோடினர்" என்று விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்ததாகப் 'புதினம்' இணைய தளம் கூறுகிறது.
மேலும், இத்தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படையினர் ஒருவரின் உடலும், ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 05 May 2008 (12:49 IST)
Updated Date: Mon, 05 May 2008 (12:48 IST)