Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறு பௌத்த துறவிகளுக்கு சிறைத் தண்டனை!

ஆறு பௌத்த துறவிகளுக்கு சிறைத் தண்டனை!
, புதன், 30 ஏப்ரல் 2008 (10:53 IST)
லாசாவில் கடந்த மார்ச் மாதம் சீன அரசிற்கு எதிராக கலவரம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதித்துள்ள சீன அரசின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் பௌத்தத் துறவிகள் 6 பேருக்கும் கடும் தண்டனைகளை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் லாசா நகரில் சீன அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து மூண்ட கலவரத்தில் 20 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று சீன அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பௌத்தத் துறவிகள் 6 பேர் உட்பட 30 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது சீன அரசு.

இந்த வழக்கினமுதலகட்டமாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. 5 பௌத்தத் துறவிகளில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனையும், மீதமுள்ள மூன்று துறவிகளுக்கு 15 ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil