இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செத்துவிடவில்லை. அந்த ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட இவ்வளவு காலம் ஆகிறதே... அப்படியென்றால் அது செத்துவிட்ட ஒப்பந்தம் என்று பலரும் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, "அது செத்துவிட்ட ஒப்பந்தம் என்று ஒரு போதும் கருத இடமில்லை" என்று கூறியுள்ளார் டானா பெரினோ.
"இந்திய அரசு தனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனை செய்து வருகிறது, ஒப்பந்தம் பற்றி தொடர்ந்து இந்திய அரசு கலந்தாலோசித்து வருகிறது, என்பதெல்லாம் நல்ல அறிகுறிகள்" என்று அவர் மேலும் கூறினார்.