தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமித் ஹர்சாய் காயமின்றி உயிர் தப்பினார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஹர்சாய் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் ஹர்சாய் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தார். அப்போது தேசியகீதம் பாடப்பட்டது. இந்தநிலையில் அருகில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் குண்டுவெடிப்பு சத்தம் நிகழ்ந்தது. இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
அருகில் உள்ள வீடுகளில் இருந்து தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிபர் ஹர்சாய் காயமின்றி உயிர் தப்பினார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயம் அடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தினருக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடந்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.