திபெத் விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் தனிப்பட்ட பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
தலாய் லாமா தரப்பில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் தனிப்பட்ட பிரதிநிதிகளை சீன அரசு அதிகாரிகள் விரைவில் தொடர்பு கொள்வார்கள் என்று அந்நாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
"தலாய் லாமாவுடன் பேசுவதற்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது" என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறுகிறது.
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் இடையூறு விளைவிக்காமல் தடுக்கும் வகையில் இப்பேச்சு அமைந்திருக்கும் என்றும் சீனா கூறியுள்ளது.