Publish Date: Thu, 24 Apr 2008 (18:02 IST)
Updated Date: Thu, 24 Apr 2008 (18:02 IST)
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டனர்.
இலங்கை மன்னாரில் இன்று அதிகாலை முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது.
மன்னாரில் திருக்கேதீச்சரம் சேத்துக்குளம் பகுதியில் இருந்து வேட்டையா முறிப்புக்குளம் நோக்கி இன்று அதிகாலை 5.45 மணிக்கு சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பதிலடி கொடுத்ததாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இன்று காலை 11 மணி வரை நீடித்த இந்த மோதலில் படையினர் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமனோர் படுகாயம் அடைந்ததாகவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
இதேபோல மன்னார் பாலைக்குழிப் பகுதியிலிருந்து அடம்பன் நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.