பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"தற்சமயம் லாகூர் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கைச் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் விரைவில் அவரைச் சந்திப்போம்" என்று சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கார் பி.டி.ஐ. நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
முன்னதாக, சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீட் கார், மகள்கள் ஸ்வந்தீப், பூணம், சகோதரி தல்பீர் கார், அவரது கணவர் பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக நேற்று பாகிஸ்தான் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.