Publish Date: Wed, 23 Apr 2008 (10:32 IST)
Updated Date: Wed, 23 Apr 2008 (10:32 IST)
பென்சில்வேனியாவில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த மாகாணத்தில் இதுவரை வெளியான முடிவுகளில், 54 விழுக்காடு வாக்குகளை ஹிலாரி கைப்பற்றியுள்ளார். அவருக்கு போட்டியாக உள்ள பராக் ஒபாமா 46 விழுக்காடு ஆதரவு பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து ஹிலாரி கூறுகையில், "இந்தப் போட்டியில் இருந்து விலகிட வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினர். ஆனால், அமெரிக்க மக்களுக்கு யார் தகுதியுடைய அதிபர் என்பது தெரியும்" என்றார்.
பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும், இல்லினாய்ஸ் செனட்டராக இருந்துவரும் கருப்பினத்தவரான ஒபாமா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதுவரை 1,648 பிரதிநிதிகளின் ஆதரவினை ஓபாமா தக்க வைத்துள்ளார். ஆனால் ஹிலாரிக்கு 1,509 பிரதிநிதிகளின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளார் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு அக்கட்சியின் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Wed, 23 Apr 2008 (10:32 IST)
Updated Date: Wed, 23 Apr 2008 (10:32 IST)