Publish Date: Tue, 22 Apr 2008 (20:13 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (20:13 IST)
ஈராக்கில் சர்வதேசப் படையினர் நடத்திய தாக்குதலில் ஷியா பிரிவுத் தீவிரவாதிகள் 40 பேர் பலியாயினர்.
ஈராக்கின் நஸ்ரியா நகரில் ஈராக் படையினர் மீது ஷியா பிரிவுத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேசப் படையினர் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த பதிலடித் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.