அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் ஈரானை உருத்தெரியாமல் அழிப்போம் என்று கூறியுள்ளார்.
ஏ.பி.சி. தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சிக்கான நேர் காணலில் இஸ்ரேல் மீது ஈரான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்வீரகள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன், வெள்ளை மாளிகையில்தான் அதிபர் பொறுப்பில் இருக்கும்போது இஸ்ரேலை ஈரான் தாக்கினால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறியதோடு "அடுத்த 10 ஆண்டுகள் காலக் கட்டத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஈரான் முட்டாள்தனமாக நினைத்தால், ஈரானை உருத்தெரியாமல் நாம் அழித்து விடுவோம்" என்று ஆவேசம் காட்டியுள்ளார்.