Publish Date: Tue, 22 Apr 2008 (15:06 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (15:06 IST)
2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷிய தலை நகர் ஜகார்தாவிற்கு இன்று வந்து சேர்ந்தது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பண்டைய கிரேக்க ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட இந்த சுடர் தனி விமானத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்தோனேஷியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
விமான நிலையத்தில் பொது மக்கள் சுடர் வருகையை முன்னிட்டு தங்களது மகிழ்ச்சியுடன் ஆரவாரக்குரல்களை எழுப்பினர்.
இன்று மதியம் மத்திய ஜகார்தாவில் உள்ள கெலோரா பங் விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் சுமார் 80 பேர் கலந்து கொள்கின்றனர்.