Publish Date: Tue, 22 Apr 2008 (13:18 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (13:18 IST)
இலங்கை முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 சிறுமிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு நகரின் மையத்தில் கத்தோலிக்க கோயிலாக இருந்து ஆழிப்பேரலை நினைவு மையமாக மாறியுள்ள பகுதி மற்றும் கரையோரப் பகுதிகளில் சிறிலங்க விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாக புதினம் இணையதளம் தெரிவிக்கிறது.
நேற்று பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் அம்பலவன் பொக்கணையைச் சேர்ந்த உகந்தன் என்ற இளைஞர் பலியானார். மணற்குடியிருப்பு, வண்ணாங்குளம், பொக்கணை பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.