Newsworld News International 0804 21 1080421025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஃப்கன் சண்டையில் 11 தலிபான்கள் பலி!

Advertiesment
ஆஃப்கன் தலிபான் ஹெல்மா‌ண்ட் காந்தஹார்
தெற்கு ஆஃப்கன் பகுதியில் அன்னியப் படையினர் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 11 தலிபான் தீவிரவாதிகள் பலியானதாக ஆஃ‌ப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆஃப்கன் மற்றும் ச‌ர்வதேச‌ப் படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஹெல்மா‌ண்ட் மாகாணத்தில் சண்டை மூண்டது. இதில் 7 தீவிரவாதிகள் பலியாயினர்.

காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஆஃப்கன் ராணுவ முகாமை தலிபான் தீவிரவாதிகள் தாக்கிய போது மேலும் 4 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், ஸாபுல் மாகாணத்தில் சாலையில் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் ஆஃப்கன் ராணுவத்தினர் 5 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil