Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெனாசிர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் நிபந்தனை!

Advertiesment
பெனாசிர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் நிபந்தனை!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (13:58 IST)
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை கடத்தியுள்ள கடத்தல்காரர்கள் பெனா‌சி‌ர் கொலை‌க் கு‌ற்றவா‌ளிக‌ள் உ‌ள்பட பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 12 கைதிகளை விடுவிக்குமாறு நிபந்தனை விடுத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பாகிஸ்தான் தூதரக அதிகாரி தாரிக் அஸீஸுதீன், அவரது வாகன ஓட்டுனர், மெய்க் காப்பாளர்கள் ஆகியோர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அஸிஸுத்தீன் பேசிய வீடியோவை அல் அராபியா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதில் அவர் கடத்தல்காரர்களின் அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

சிறையில் உள்ள லால் மசூதி மதத்தலைவர் மௌலானா அப்துல் அஜீஸ், ஷாரியத் முகமதி தலைவர் மௌலானா சூஃபி, ஆப்கனைச் சேர்ந்த 5 தலிபான் தீவிரவாதிகள், பெனாசிர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஆகியோரை விடுவித்தால் தூதகரக அதிகாரியை விடுவிப்போம் என்று கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

விடுவிக்கக் கோரிய 12 கைதிகளும் தீவிரவாத இயக்கத் தலைவர் பைத்துல்லா மெஹ்சூதுடன் தொடர்புடையவர்கள் என்று பாகிஸ்தான் அரசு தரப்பினர் கூறியுள்ளனர்.

ஆனால் கடத்தல்காரர்கள் யார் என்ற விபரமும் கடத்திய தூதரக அதிகாரியின் இருப்பிடம் குறித்தும் இதுவரை எந்த விதத் தகவல்களும் கிடைக்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil