இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஹமாஸைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்பினரும் கூறியுள்ளனர்.
மத்திய, வடக்கு காஸாவில் நடந்த சண்டையில் 5 ஹாமாஸ் படையினர் உட்பட ஏராளமான இஸ்ரேல் ராணுவத்தினர்களும் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தெற்குப் பகுதியை நோக்கி ஹமாஸ் போர்ப்படையினர் ராக்கெட் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காஸாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்காக பாடுபட்ட எகிப்திற்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.
காஸாவை ஹமாஸ் தன் வசம் வைத்திருக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.