Publish Date: Wed, 16 Apr 2008 (11:30 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
டாக்கா: வங்கதேசத்தின் தங்கெய்ல் மாவட்டத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பயணிகள் பேருந்தின் மீது ரயில் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாக அதிகாரி அக்தர் அலி சர்கார் தெரிவித்துள்ளார்.
எனினும் பேருந்தின் மீது மோதிய எகோட்டா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், தலைநகர் டாகாவில் இருந்து 80 கிமீ தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.