Publish Date: Tue, 15 Apr 2008 (19:12 IST)
Updated Date: Tue, 15 Apr 2008 (19:12 IST)
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு இந்தியத் தலைநகர் டெல்லியில் நடக்கவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடக்கும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் ஜியாங் யு, ஏப்ரல் 17 ஆம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்தார்.
"ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை நடத்துவது என்பது இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்கள் அனைவருக்கும் பெருமை தரக்கூடியது. இதனால் இந்த விடயத்திற்கு இந்தியா மிகவும் ஆர்வத்துடன் முக்கியத்துவம் அளிக்கிறது.
இதனால் இந்திய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் மிகவும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார் அவர்.