பாகிஸ்தானில் லாகூர் நகரத்தில் உள்ள பழைய பொருட்கள் கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.
லாகூரில் மிஸ்ரி ஷா என்ற பகுதியில் உள்ள பழைய பொருட்கள் சந்தையில் இன்று மாலை 3 மணிக்கு நடந்த வெடிவிபத்தில் ஏராளமான கட்டங்கள் சேதமடைந்தன.
இதற்கிடையில், சந்தையில் வெடித்தது குண்டு அல்ல, அது எரிவாயு சிலிண்டர்தான் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பழைய பொருட்களிடையே கலந்திருந்த வெடிபொருட்கள் தீப்பற்றியதால் சேதம் அதிகமாகி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.