Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசா முறையை கை‌விடுவது ப‌ற்‌றி இந்தியா-பாக். விரைவில் பேச்சு!

Advertiesment
விசா முறையை கை‌விடுவது ப‌ற்‌றி இந்தியா-பாக். விரைவில் பேச்சு!
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (17:07 IST)
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே விசா முறையை கைவிடுவது குறித்த 5 ஆவது கட்ட பேச்சஓரிரு மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருநாடுகளிலும் சுதந்திரமாக பயணம் செய்வதை உறுதிப்படுத்தும் இந்த விசா விலக்கு ஒப்பந்தமநிறைவேற்றப்பட்டால், அது இருநாட்டு உறவின் சின்னமாக அமையும். என்றபோதிலும், இந்த பேச்சு முரண்பாடுகளகளைவதற்கு உதவுமா? என்பது சந்தேகமே.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அயலுறவு செயலர் சிவ சங்கர் மேனனு‌ம், அவரை தொடர்ந்து மத்திஅயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியு‌ம் பாகிஸ்தான் செல்வார்க‌ள் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல்களை தூதர் அளவிலான உயர்மட்ட தொடர்புகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil